சென்னை,

விளைநிலைங்கள்  சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு காரணமாக, சென்னை ஐகோர்ட்டு வீட்டுமனை பதிவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இதுகுறித்து பல்வேறுகட்ட விசாரணைக்கு பின், இந்த விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டதாக அரசு வழகறிஞர் ஐகோர்ட்டில் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று  உயர்நீதிமன்றத்தில் அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தமிழக அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசின் அரசாணையை  ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள  அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது,

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை ஒழுங்குப்படுத்த புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில்  20-10-16க்கு முன்பு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை அங்கீகரிக்க அரசு திட்ட மிட்டுள்ளது.

விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக இருந்தால் வீட்டு மனையாக மாற்றக்கூடாது தொடர்ந்து வேளாண்மை செய்ய ஏற்ற நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றமுடியாது.

விவசாய நிலம் இல்லை என்பதற்கு வேளாண் இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும்

ஆறு, கால்வாய் உள்ளிட்ட இடங்களை வீட்டுமனையாக மாற்றக்கூடாது.

இதேபோல் கோயில் நிலங்கள், வக்பு வாரிய நிலங்களை வீட்டு மனையாக மாற்றமுடியாது.

உரிமம் இல்லாத காலி நிலத்தை வீட்டு மனையாக பதிவு செய்ய அனுமதியில்லை

என புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.