மதுரை:
ராஜராஜ சோழன் சமாதி உள்ள இடத்தை அகழ்வராய்ச்சி செய்ய வேண்டும் தமிழக தொல்லியல் துறைக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
உலக பிரசித்த பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழனின் சமாதி கும்பகோணம் அருகிலுள்ள வலங்கைமான் நகரத்தின் அருகே உங்ளள சோழன் மாளிகை அருகே உள்ள உடையாளூர் கிராமத்தில் ஒரு இடத்தில் லிங்கம் ஒன்று சிலரால் வழிபாடு நடத்தப்பட்டு வரு கிறது. இதுகுறித்து ஆராயந்த பல ஆய்வாளர்கள், அது ராஜராஜ சோழனின் சமாதி என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ராஜராஜ சோழனின் சமாதி, கேட்பாரற்று சிதைந்து கிடக்கிறது இருப்பதாகவும், அதை பராமரித்து சமாதி உள்ள இடத்தில் மணிமண்டபம் கட்டி, அதை அனைவரும் பார்த்து அறியும்விதமாகச் சுற்றுலாத்தலமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இதுகுறித்து, தமிழக அரசின் தொல்லியல் துறையின் உயர்மட்டக் குழுவினர் தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள், உபகரணங்களைக் கொண்டு, ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அகழ்வாய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ராஜராஜனைத் தொட்டால் ஆபத்து என்று சிலர் நினைக்கிறார்களா?” என்று கேள்வியெழுப்பி, இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், ராஜராஜன் சோழன் சமாதி இருக்குமிடத்தை குடவாயில் பாலசுப்ரமணியனே அகழ்வாராய்ச்சி செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
ஏற்கனவே ராஜராஜ சோழன் குறித்து பலர் ஆய்வுகள் மேற்கொண்டு வந்துள்ள நிலையில், ராஜராஜ சோழனின் சமாதி அமைந்துள்ளதாக கூறப்படும் உடையாளூர் கிராமத்தில் எதோ ஒரு வரலாற்று உண்மை புதைந்து கிடக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அங்கு ஒரு மண்டபம் இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த இடத்தில் எதோ ஒரு புரதான நினைவு சின்னம் உள்ளது என்று தெரிந்தும் அரசு ஏன் அந்த இடத்தை அரசுடைமை ஆக்காமல், அதை ஒரு பாதுகாப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கா மல் இருக்கிறது என்பதே மிகப் பெரிய கேள்வி. பலருக்கு ராஜராஜ சோழன் சமாதியை ஆராய்ந்த தால் தங்கள் பதவி போய்விடுமோ ? உயிர் போய்விடுமோ ? என்ற பயம் காரணமாகவே அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள தயங்கி வருவதாக கூறப்படுகிறது.