டில்லி: அகில இந்திய தேர்தல் ஆணையம் இப்போது வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் இறப்பு பதிவு தரவைப் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புபணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதுபிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக கள்ள ஓட்டு போன்ற முறைகேடுகள் தவிர்க்கப்படும் என நம்பப்படுகிறது.

வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், இறப்புச் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைத்தல், வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளுக்கான புகைப்பட அடையாள அட்டைகள் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வாக்காளர் தகவல் சீட்டுகள் உள்ளிட்ட சீர்திருத்தங்களின் தொகுப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் எளிமையாக வாக்கினை செலுத்தும் வகையில், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மாநில தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விபரங்கள் துல்லியமாக இருப்பதற்காக, இறந்தவர்களின் பெயரை நீக்க தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதற்காக, பிறப்பு, இறப்பு பதிவுகளை, இந்தியப் பதிவாளர் ஜெனரலிடம் இருந்து பெற்று திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இறப்பு குறித்த தகவலை சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினரிடம் மறு உறுதி செய்ய, பூத் அளவிலான அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், வாக்காளர் பட்டியலில் வாககாளர்கள் தங்களின் ஓட்டுச்சாவடி குறித்த விபரத்தை விரைந்து அறிந்து கொள்ள முடியும். மேலும், தேர்தல் அதிகாரிகள் ஓட்டு போடும் நபரின் பெயரை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.
அதாவது, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினர் தேர்தல் கமிஷனில் இருந்து 7ம் எண் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
பல சந்தர்ப்பங்களில் இறப்பு தகவல் முறையாக தெரிவிக்கப்படாத காரணத்தால் வாக்காளர் பட்டியலில் பிழைகள் நேர்கின்றன. மேலும் கள்ள ஓட்டு போடுவதற்கும் வாய்ப்புகள் எழுகின்றன. இதை தடுக்கும் நடவடிககையாகஇ,
பிறப்பு, இறப்பு சான்றுகளின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும்’ என, தலைமை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கான அறிவிப்பு கடந்த மாதமே வெளியான நிலையில், தற்போது, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்திய பதிவாளர் ஜெனரலிடம் இருந்து இறப்பு பதிவுகளை மின்னணு வாயிலாக பெற்று, அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நடவடிக்கையில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது.
ஒருவர் உயிரிழந்த பின் இறுதிச்சடங்கை செய்ய இறப்பு சான்று கட்டாயம் என்பதால், இறப்பு பதிவுகள் துல்லியமாக பதிவாகின்றன. இந்த தரவுகளை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் பணியை தலைமை தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளதாக று அறிவித்துள்ளது. பூத் அளவிலான அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்ளும் போது, இறப்பு தொடர்பான தகவலை உறுதி செய்து வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.