டெல்லி:

அரசியல் கட்சிகளின் சாதனை விளக்க பேனர்களில் தலைவர்களின் படம்,கட்சி பெயர், சின்னம் வெளியிட தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது.

உபி. உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேதிகள் அறிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் மாநிலங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகள், பேனர்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசியல் கட்சிகளின்  ஆட்சி சாதனை விளம்பரங்களில், உயிருடன் இருக்கும் பிரமுகர்கள், கட்சி தலைவர்கள் தொடர்பான புகைப்படம் இடம்பெற்றிருக்கும் அனைத்து விளம்பரங்கள், பேனர்கள் மீது அந்தந்த மாநில தேர்தல் ஆணையர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அதில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் படம், கட்சி பெயர், சின்னம், பிரமுகர்கள் புகைப்படங்களை அகற்ற வேண்டும். அல்லது மறைக்க வேண்டும். குடும்ப கட்டுப்பாடு மற்றும் சமூக நல திட்டங்கள் தொடர்பான விளம்பர பதாககைகளை அனுமதிக்கலாம். மக்கள் பணத்தில் தேர்தல் ஆதாயம் தேடும் வகையில் உள்ள விளம்பரங்களில் உள்ள புகைப்படங்களை அகற்ற வேண்டும்