கேன்சர் எனப்படும் கொடிய நோயின் காரணமாக சாவை எதிர்நோக்கி இருந்த சிறுமி, தன்னை காப்பாற்றுமாறு தந்தையிடம் கதறி அழுது கெஞ்சும் வீடியோ பதிவு மனதை உருக்குவதாக உள்ளது.
ஆனால், அந்தக் குழந்தை தற்போது உயிருடன் இல்லை என்பது சோக சம்பவம்.
ஆந்திராவில் விஜயவாடா பகுதியை சேர்ந்த சிறுமி சாய்ஸ்ரீ. அவருக்கு வயது 13 மட்டுமே. இவர் எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
கணவன் மனைவிக்கு இடையே நடைபெற்ற பிரச்சினை காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சிறுமியின் கேன்சர் நோய் குணமாக சுமார் 40லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அதற்கான பணம் கட்ட சிறுமியின் தந்தை முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
குழந்தையை நோயில் இருந்து காப்பாற்ற இருக்கும் வீட்டை விற்று பணத்தை தரும்படி சிறுமியின் தாயும் கெஞ்சி கேட்டுள்ளார். ஆனால் அவரது கல் மனம் இரங்கவில்லை. அதன் காரணமாக சிறுமி தனக்கு சிகிசை அளிக்க பணம் தேவைப்படுவது குறித்தும், அதற்காக தற்போது இருக்கும் வீட்டை விற்று மருத்துவ செலவுக்கு உதவுமாறு கெஞ்சி கேட்டுள்ளார்.
இதன் காரணமாக சிறுமியையும், அவரது தாயையும் தெலுங்கு எம்.எல்.ஏ., போண்டா உமாமகேஸ்வர ராவ் மூலம் ரவுடிகளை சிவகுமார் என்பவர் அனுப்பியுள்ளார். அவர்கள் அனுப்பி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் தாய் போலீசில் புகார் கொடுத்தும், போலீசார் புகாரை வாங்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் சிறுமி சாய்ஸ்ரீக்கு போதிய மருத்துவம் அளிக்காததால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது குழந்தையின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து குழந்தைகளுக்கான பாலால ஹக்குலா சங்கத்தின் தலைவர் அச்யுதா ராவ் கூறுகையில், ”மனித உரிமை கமிஷனில் புகார் அளித்துள்ளோம். மேற்கொண்டு நடவடிக்கைக்கு வலியுறுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
மனித உரிமை கமிஷனம் இதுகுறித்து விசாரித்து வருகிறது.
[youtube https://www.youtube.com/watch?v=8cRcaWoeHOg]