நியூயார்க் :
அமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் வெற்றி எனபதை கணிக்கும் விதமாக டேவ் மற்றும் எஸ் அண்ட் பி 500 ஆக உயர்ந்தது
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்த்லுக்கு முன் தினமான நேற்று ஜோ பிடன் ஜனாதிபதி பதவியை வெல்வார் என்று வெளிகாட்டும் வகையில், டோவ் மற்றும் எஸ் அண்ட் பி 500 புள்ளிகள் அதிகரித்தது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட 10 சதவீத புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார் என்று நேற்று வெளியிடப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.பி.சி நியூஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பில், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடையே டிரம்ப்பிற்கு 42 சதவீத ஆதரவும், பிடனுக்கு ஆதரவு 52 சதவீதமாக உள்ளது. அரிசோனா, புளோரிடா, ஜார்ஜியா, அயோவா, மைனே, மிச்சிகன், மினசோட்டா, வட கரோலினா, நியூ ஹாம்ப்ஷயர் நெவாடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 12 ஒருங்கிணைந்த மாநிலங்களில் பிடன் 51 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை முன்னிலை வகிப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 57 சதவீத வாக்காளர்கள் டிரம்ப் கொரோனா தொற்றுநோயைக் கையாண்ட விதத்தை தவறு என்கிறார்கள் அதே நேரத்தில் 55 சதவீத வாக்காளர்கள் அவரது நிர்வாகம் பொருளாதாரத்தை நல்ல விதமாக கையாள்வதாக கூறி உள்ளனர்.
அக்டோபரில் பொருளாதார வல்லுநர்கள் கணித்ததை விட அமெரிக்காவின் தொழிற்சாலைகள் சிறப்பாக செயல்பட்டதாக விநியோக மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.