சேலம்: “அதிமுக பொற்கால ஆட்சி, திமுக அவல ஆட்சி” என்று விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக  மாறி  உள்ள என குற்றம் சாட்டி உள்ளார்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தினார்களா?, கேஸ் கட்டணம் குறைத்தார்களா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது சுற்றுப்பயணம் தற்போத நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. நாமக்கல் அருகே உள்ள அக்கியம்பட்டியில் பொதுமக்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அங்கு மக்கள் மத்தியில்  உரையாற்றினார்.

அப்போது, “எவ்வளவு மழை பெய்தாலும் அதிமுக வெற்றி பெற காத்திருப்பவர்களுக்கு நன்றி என கூறியவர்,  நாமக்கல் பகுதியில், மலைவாழ் மக்கள் பயன்பெற  கலை அறிவியல் கல்லூரியை கொண்டு வந்தோம் என்றவர்,   நானும் விவசாயி என்பதால் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம்.

மலைவாழ் மக்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கப்படும். தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும். நிறுத்தப்பட்ட லேப்டப் வழங்கப்படும். 7.5 இடஒதுக்கீடு மருத்துவ கல்வி ஏழை மாணவர்களுக்கு கொடுத்த அரசு அதிமுக. அம்மா இருசக்கர வாகனம் அதிமுக ஆட்சி வந்த பின் வழங்கப்படும் என்று கடந்த அதிமுக ஆட்சி கால திட்டங்களை கூறினார்.

மேலும்,   கொரோனோ காலத்தில் நிவாரண தொகை வழங்கியது. மாணவர்கள் ஆல்பாஸ், ஆன் லைன் வகுப்பு கொடுத்தது அதிமுக சாதனை என்று கூறியதுடன்,  அதிமுக ஆட்சியில்  விலை வாசி உயர்வை   கட்டுப்படுத்தினோம்.

ஆனால், திமுக ஆட்சியில் பாருங்கள், மக்களின் வாழ்வாதாரமான,  அரிசி, பருப்பு விலை  உயர்ந்து விட்டது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இந்தியாவில் அதிக கல்வி பயிலும் மாநிலம் தமிழ்நாடு அதிமுக ஆட்சியில் தான். 11 மருத்துவமனை அமைத்தோம், நாமக்கல்லில் சட்டக்கல்லூரி, கூட்டுகுடிநீர் கொண்டு வந்தது. அதிமுக பொற்கால ஆட்சி. திமுக அவல ஆட்சி, அனைத்துக்கும் வரி போட்டது.

கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தினார்களா? கேஸ் விலை குறைத்தார்களா? ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் இனிமேல்  திமுக ஆட்சிக்கு வரமுடியாது.

”திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அரசு பொது மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு முறையாக சிகிச்சை கிடைக்கவில்லை. திமுக அரசின் 67 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல நகராட்சி பேரூராட்சி போன்ற பகுதியில் இருந்த வீட்டு வரி 1000 கட்டணம் தற்போது 2000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையில் மேயர் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம், திருநெல்வேலி மேயர்களுக்கும், கவுன்சிலருக்கும் சண்டை இருந்து வருகிறது.

திமுகவினர் நடத்தும் மருத்துவமனையில் உடல் உறுப்பு திருட்டு நடைபெற்று வருகின்றன. எனவே, பொதுமக்கள் திமுகவினர் நடத்தும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டிருந்தால் மீண்டும் வேறு மருத்துவமனை சென்று நல்ல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை அமோகமாக இருக்கிறது. மேலும் சாக்லேட், ஆம்லெட் போன்றவற்றில் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக இருக்கிறது. இளைஞர்கள் பொதுமக்கள் போன்றவர்கள் போதைக்கு அடிமையாகி சென்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய எங்களால் முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கைவிரித்துவிட்டார்.

ராசிபுரம் பகுதி தாழ்த்தப்பட்டோர் நிறைந்த பகுதியாக இருக்கிறது. அவர்களுக்கு அதிமுக ஆட்சி அமைந்த உடன் விடு இல்லாத மக்களுக்கு சிறந்த முறையில் கான்கிரீட் வீடு கட்டி தரப்படும். திமுக அரசு அமைந்த உடன் மாணவருக்கு வழங்கப்படும் லேப்டாப் நிறுத்தப்பட்டது. அதிமுக அரசு அமைந்த உடன் லேப்டாப் வழங்கப்படும்”, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” .

இவ்வாறு கூறினார்.