பால்வெளி எனப்படும் அண்டவெளியில் நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிதாக பிறந்த கிரகம் ஒன்றை அமெரிக்காவின் நாசா வானியல் ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு கண்டு பிடித்துள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில், தற்போது இதுவரை அறிந்திராத சிறிய நட்சத்திரத்தை வானிலை ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவித்து உள்ளது.
ஏற்கனவே, 3,000-க்கும் மேற்பட்ட புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வானியல் ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் தற்போது, இதுவரை கண்டுபிடிக்கப்படாத சிறியதொரு நட்சத்திரத்தை விஞ்ஞானி கள் கண்டுபிடித்துள்ளனர் என்று நாசா தெரிவித்து உள்ளது.
பூமியில் இருந்து சுமார் 600 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்ற சனிக் கிரகத்தை விட சற்று பெரியதொரு நட்சத்திரத்தை கண்டறிந்த பின்னர் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
‘இபிஎல்எம் ஜே0555-57எபி’ என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திரம், மிகவும் பெரியதொரு நட்சத்திரத்தை சுற்றிவருகின்ற, ஒரு பெருந்திரளை சுற்றிய சூரிய சுற்றுவட்டப்பாதைகள் இரண்டினை கொண்டுள்ள அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது.
நட்சத்திரம் என்று அழைக்கும் தகுதி பெற்றிருப்பது மட்டுமன்றி, நடசத்திரங்கள் எவ்வளவு சிறியதாக இருக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுவதாக இந்த நட்சத்திரம் மிகவும் சிறியதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது உணர்த்துகிறது.
ஒரு நட்சத்திரம் எவ்வளவு சிறியதாக இருக்கலாம் என்று எங்களுடைய இந்த கண்டுபிடிப்பு வெளிப்படுத்துகிறது” என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சோந்த ஆய்வாளர்களில் ஒருவரும். வானவியலாளருமான அலெக்ஸாண்டர் போயேட்டிச்சர் கூறியிருக்கிறார்.
“இன்னும் சற்று குறைவான பெருந்திரளாய் மட்டும் இந்த நட்சத்திரம் உருவாகியிருந்தால், இதனுடைய மையத்தில் காணப்படும் ஹைட்ரஜன் ஹீலியமாக பிணைவது பராமரிக்கப்பட்டி ருக்காது. இந்த நட்சத்திரம் பளுப்பு நிற சிறிய நட்சத்திரமாக மாறியிருக்கும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இதன் காரணமான பளுப்பு நிற நட்சத்திரங்கள் ‘தோல்வியடைந்த நட்சத்திரங்கள்’ என அழைக்கப்படுகின்றன. ஆனால், சிறிய உருவில் இருந்தாலும் ‘இபிஎல்எம் ஜே0555-57எபி’ அதனுடைய மையத்தில் ஹைட்ரஜன், ஹீலியம் பிணைப்பை உருவாக்குவதற்கு போதுமான பெருந்திரளை பராமரித்து வருகிறது.
‘இபிஎல்எம் ஜே0555-57எபி’ ஒரு நட்சத்திரமென தகுதி பெற்றிருந்தாலும் அளவில் மிகவும் சிறியதாக உள்ளது. நம்முடைய சனிக் கிரகத்தை விட 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மடங்கை விட சிறியதாக இதுவுள்ளது.
பெரிய தாய் நட்சத்திரத்திற்கு மிகவும் நெருங்கி, சிறியதாக இது இருப்பதால், ‘இபிஎல்எம் ஜே0555-57எபி’யை கண்டறிவது சவாலாக இருந்தது.
“கலங்கரை விளக்கத்திற்கு பக்கத்தில் இருக்கும் மெழுகுத்திரியை பார்ப்பதுபோல இது இருக்கிறது” என்று இந்த ஆய்வு அணியை சேர்ந்த அமுரே ட்ரியௌடு தெரிவித்திருக்கிறார்.
‘இபிஎல்எம் ஜே0555-57எபி’ சுற்றிவருகின்ற பாதையில் பெரியதொரு நட்சத்திரத்திற்கு முன்னால் கடந்து செல்லுகையில் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதனை சிறியதொரு நட்சத்திரம் என்று இந்த ஆய்வு அணியினர் சந்தேகமே படவில்லை.
தொலைவில் இருக்கின்ற நட்சத்திரங்களின் ஒளியின் ஒரு பகுதியை கிரகங்கள் தடுக்கின்றபோது, அதன் பிரகாசம் குறைவதில் இருந்து, அந்த வழியில் ஏதோ உள்ளது என்று வானத்தை பற்றிய ஆய்வு நடத்துகின்ற நிபுணர்கள் வழக்கமாக கருதுகின்றனர்.
இதே வழிமுறையில் தான் ‘இபிஎல்எம் ஜே0555-57எபி’யும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்த நட்சத்திரத்தின் உண்மையான அடையாளத்தை உறுதிசெய்ய மேலதிக அளவீடுகள் தேவைப்பட்டன.
“அதன் பெருந்திரளை அளவீடு செய்யும் வரை இதுவொரு வழிமாறுகின்ற கிரகம் போல தோன்றி யது” என்று ட்ரியௌடு கூறியிருக்கிறார்.
இந்த ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆய்வுகள் மூலம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டிஆர்எபிபிஐஎஸ்டி-1 கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள பெருந்திரளை இந்த சிறிய நட்சத்திரம் கொண்டிருப்பதாக ஒப்பிடப்படுகிறது. ஆனால், அதனுடைய ஆரத்தில் இதற்கு 30 சதவீதம் குறைவு.
சிறிய, பிரகாசம் குறைந்த, குளிர்ச்சியான இத்தகைய நட்சத்திரங்கள் உயிர் வாழ்க்கைக்கு உகந்தவைகளாக கருதப்படுபவை.
எனவே, இவ்வாறான ஒவ்வாரு நட்சத்திரங்களிலும் காணப்படும் மிதமான நிலை, அவற்றின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூற்றை அதிகரிக்கும்.
சனிக் கிரகத்தை விட 20 சதவீதம் குறைவான பெருந்திரளை கொண்டிருப்பதாக கருதப்படும் இத்தகைய சிறிய நட்சத்திரங்கள் இந்த பேரண்டத்தில் மிகவும் பொதுவாக காணப்படுபவை என்று எண்ணப்படுகிறது. இவற்றை பற்றிய புரிதல் இன்னும் அதிகமாக வேண்டும்.
மிகவும் பிரகாசமான நட்சத்திரங்கள் பல இருப்பதால், சிறியதொரு கறுப்பு போன்ற நட்சத்திரங்கள் வெளியே தெரியாமல் போய்விடுகின்றன. இத்தகைய நட்சத்திரங்கள் இருப்பதை கண்டறிவது மிகவும் கடினம் என்றும் ஆராயச்சியாளர்கள் கூறி உள்ளனர்.
நன்றி: பிபிசி தமிழ்