டில்லி:

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க டில்லி உயர்நீதி மன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில், டில்லி ஐகோர்ட்டில் டிடிவி தினகரன் சார்பாக,  குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த   மனுமீதான இன்றைய விசாரணையின்போது, டிடிவியின் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையத்துக்கு நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

 

இந்நிலையில்,  இந்த வழக்கின் கடந்த மாதம்  நடைபெற்ற விசாரணையின்போது,  தேர்தல் கமிஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,  டிடிவி தினகரனின் கட்சி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும்,  இதன் காரணமாக அவருக்கு குறிப்பிட்ட சின்னம் ஒதுக்குவது குறித்து கேள்வி எழவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்து, மாநில தேர்தல் கமிஷன். இதில் இந்திய தேர்தல் ஆணையம் தலையிடாது. அதன் காரணமாக அவருக்கு சின்னம் ஒதுக்க முடியாது என்றும். தினகரன் அணியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளது.

இந்த விசாரணையின்போது, தமிழக முதல்வர் பழனிசாமி எதிர் மனு தாக்கல் செய்தார். அதில்,  தனிக்கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தை தினகரன் அணுகலாம் . அதிமுகவின் கிளை என கூறி பெயர், சின்னத்தை கோருவது ஏற்புடையதல்ல என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதி மன்றம்,
தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

டில்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தினகரனுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை தினகரன் ஆதரவாளர்கள் கொண்டாடிவருகின்றனர்

[youtube-feed feed=1]