டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில், கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரி சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தது.
ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், டெல்லியை சேர்ந்த நான்காம் ஆண்டு படிக்கும் சட்டக் கல்லூரி மாணவர் அபிஷேக் சவுத்ரி என்பவர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ‘நாம் இந்திய மக்கள்’ என்ற பெயரில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு,தாக்கல் செய்தார். அவரது, மனுவில், திகார் சிறையில் பாதுகாப்பு, மருத்துவ குறைபாட்டை கருத்தில் கொண்டு கெஜ்ரிவாலின் முதல்வர் பதவிக்காலம் முடியும் வரை அவருக்கு சிறப்பு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் கோரிக்கை வைத்திருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) மேலிடத்தின் அனைத்து கிரிமினல் வழக்குகளிலும் தனது பதவிக்காலம் முடியும் வரை அல்லது விசாரணை முடியும் வரை கெஜ்ரிவாலுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது அவர்மீதான வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
மேலும், மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவால் ஃபெடரல் ஏஜென்சியால் கைது செய்யப்பட்டதில் இருந்து, டெல்லி அரசும் அதன் அமைச்சர்களும் “நெருக்கடியில் உள்ளனர்” என்றும், இந்தியா டுடே அறிக்கையின்படி நிர்வாகம் “தலைமையற்ற அமைப்பு” போல் செயல்படுகிறது என்றும் வாதிட்டார். . முதலமைச்சரின் பொறுப்புகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் தனது அலுவலகத்தில் இருப்பது அவசியம் என்றும், பல்வேறு பிரச்சனைகளில் முடிவெடுக்கவும், பொதுமக்களின் நலனுக்கான உத்தரவுகளை உடனடியாக வழங்கவும் கெஜ்ரிவால் அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
மேலும், தேவையான பயிற்சி இல்லாததால், சிறை அதிகாரிகளோ, காவல்துறை அதிகாரிகளோ முதலமைச்சரின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்றும், கெஜ்ரிவாலின் பாதுகாப்புக்கு ‘உடனடி ஆபத்து’ இருப்பதாகவும், குறிப்பாக அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அவர் கடுமையான குற்றவாளிகளுடன் நெருக்கமாக இருப்பதால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த மனுமீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் ப்ரீதம் அரோரா தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது. மேலும் “தற்போதைய மனுவில் சவால் செய்யப்படாத நீதித்துறை உத்தரவுகளின்படி அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் இருப்பதால் தற்போதைய மனுவை பராமரிக்க முடியாது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது” என்று தெரிவித்ததுடன், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், சட்டத்தின் ஆட்சியிலும் உள்ள சமத்துவக் கொள்கை எப்போதும் உயர்ந்ததாக இருப்பதை நினைவில் கொள்வது அவசியம்,
சட்டம் உங்களுக்கு மேலே உள்ளது… மேலும், இந்த ரிட் அதிகார வரம்பில் உள்ள நீதிமன்றம் நிலுவையில் உள்ள அசாதாரண இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது. உயர் பதவியில் உள்ள ஒருவருக்கு எதிராக கிரிமினல் வழக்கில் இதுபோன்று உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிமன்றம், வழக்கு தொடுத்தவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது.