டில்லி:

றைந்த சிபிஐ கோர்ட்டு நீதிபதி லோயா மரணத்துக்கு எந்தவித நோக்கமும் இல்லை என்று உச்சசீதி மன்ற நீதிபதி சந்திரசூட் கூறி உள்ளார்.

மேலும், லோயா மரணம் குறித்த வழக்கில்,  நீதிபதிகள் மீது மோசமான நம்பிக்கை ஏற்படுவதை உச்சநீதி மன்றம் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

பாஜக தலைவர் அமித் ஷா தொடர்புடைய சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கடந்த 2014ம் ஆண்டு திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நீதிபதி லோயா திடீரென மரணமடைந்தது குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் சந்தேகம் எழுப்பப்பட்டது

அமித்ஷாவின் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லேயோ  கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி தன்னுடன் பணியாற்று பவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

நீதிபதி லோயாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்; அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கோரி மும்பை காங்கிரஸ் பிரமுகர் தெஹ்சீன் பூனாவாலா மற்றும் பத்திரிக்கையாளர் பி.எஸ்.லோன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்களை அண்மையில் தாக்கல் செய்திருந்தனர்.

உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற  விசாரணையின்போது, பாம்பே வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வாதாடிய  வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, எநீதிபதி லோயாவின் மரணத்தைப்பற்றி சந்தேகங்களை எழுப்பிய ஒரு பத்திரிகை கட்டுரைக்குப் பின்னர், அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆனால் அனைத்து நீதிபதிகளும் லோயா மாரடைப்பு காரணமாகவே இறந்ததாக கூறுகிறார்கள். விசாரணை நடத்த உத்தரவிட அவர்கள்  பயப்படுகிறாரகள் என்று கூறினார்.

தவேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிரா மாநில அரசு சார்பாக ஆஜராகும், முகுல் ரோத்தகி, தவே மாவட்ட மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகள் குறித்து பேசுகிறாரா என்று கேள்வி எழுப்பினார்? மேலும், லோயா மரணம் குறித்து  விசாரணை  நாங்கள்  முடிவு செய்ய முடியாது.

வழக்கை தற்போது விசாரித்து வரும் உச்சநீதி மன்றமே,  இந்த வழக்கை தள்ளுபடி செய்வதோ அல்லது  விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

தவேவின் நீதிபதிகள் குறித்த கருத்துக்கு மகாராஷ்டிரா மாநில கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் துஷார் மேத்தாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த உச்சநீதி மன்ற அமர்வு நீதிபதி சந்திரசூட் இந்த விவகாரத்தில்,  மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளின் தீர்ப்பு குறித்தோ கருத்து தீர்ப்பு வழங்க விரும்பவில்லை என்று கூறினார்.

மேலும், நீதி லோயா மரணம் ஒரு இயற்கையான மரணம். ஆனால் அசாதரண சூழ்நிலையில் மரணம் நடந்துள்ளது. நீதிபதிகள் மீது மோசமான நம்பிக்கை  ஏற்படுவதை  நீதிமன்றம் விரும்பவில்லை எனவும் அவர் கூறினார்.

தலைமைநீதிபதி மிஸ்ரா கூறும்போது, இந்த விவகாரத்தில் “சிறிதளவு சந்தேகம்” இருந்தாலும் விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார்.

சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.எச்.லோயாவின் மரணம் தொடர்பாக சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.