டெல்லி:

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நமது நாடு பாதுகாப்பாக இல்லை என்று  அதிமுக பெண் எம்.பி. விஜிலா சத்யானந்த் நாடாளுமன்றத்தில் மோடி அரசு மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு கூறினார். கூட்டணி கட்சியான பாஜக மீது அதிமுக எம்.பி. குற்றச்சாட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் இருச்சக்கர வாகனத்தின் டயர் பஞ்சரான நிலையில், அவருக்கு  உதவுவது போல் நடித்து 4 பேர் கொண்ட அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றம் கூடியதும், அங்கும் எதிரொலித்து. அனைத்து கட்சி எம்.பி.க்களும் குற்றவாளிகளுக்கு  கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக எம்.பி., விஜிலா சத்யானந்த், நமது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டியவர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தற்போது நமது நாடு பாதுகாப்பாக இல்லை என்று மோடி அரசுமீது பகிரங்கமா குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசியவர், இந்த கொடூர  குற்றத்தைச் செய்த 4 பேரை டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தியவ்ர, அதற்கான விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தி தீர்ப்பு கூறப்பட வேண்டும் என்றும்,  “தாமதமாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும்”  என்று கூறியவர், விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.