சென்னை:

ருவறை முதல் கல்லறை வரை லஞ்சம் தலைவிரித்தாடுவதாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.

லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட கிராம நிர்வாக அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  கிராம நிர்வாக அதிகாரியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தன்னுடைய உத்தரவில் கருவறை முதல் கல்லறை வரை இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்று கூறியவர், பிறப்பு முதல் இறப்பு வரையிலும் லஞ்சமும் ஊழலும் அதிகரித்து இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

நாடு முழுவதும் அரசு நிறுவனங்களில் பணிகள் நடைபெற லஞ்சம் வழங்கப்படுவதும, தற்போது, லஞ்சத்திற்கு பதிலாக இச்சைக்கு இணங்க வலியுறுத்தும் துரதிஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியவர், தற்போதைய சூழலில் வாக்கு பணம் லஞ்சம் சமுதாயத்தில் சாதாரண விஷயமாகி விட்டதாகவும்,  சட்டமன்றத்துக்கும், நாடாளு மன்றத்துக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்தின் அடிப்படையை ஆட்டம் காணச் செய்துவிடும் என்றவர்,  ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.