16 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக 2021ம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த நிலையில், 2027 மார்ச் 1 முதல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
லடாக், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மலைப்பாங்கான மாநிலங்களில் அக்டோபர் 1, 2026 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும். அதேசமயம் சமவெளிகளில், சாதி கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 அன்று தொடங்கும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு பாத்தாண்டும் மேற்கொள்ளப்படும் நிலையில் 2026 கணக்கெடுப்பிற்குப் பிறகு இதன் சுழற்சிமுறையில் மாற்றம் இருக்கும் என்றும் அடுத்த கணக்கெடுப்பு 2036ம் ஆண்டும் அதற்கடுத்து 2046ம் ஆண்டும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.