aaa
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான வழக்கு வரும் 13ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட  ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை வரும் மே 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கிறது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று  நீதிபதிகள் அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.