சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என பாஜக உறுப்பினரின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கூறினார். அப்போது, உறுப்பினரின் கேள்வி குறித்து பரிசீலிப்போம் என்றார்.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி  முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.  3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று அவை மீண்டும் கூடியது. காலையில் வழக்கமான நடைமுறைகளுடன் கேள்வி நேரம் தொடங்கியது அப்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதைத்தொடர்ந்து,   கூடியது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் தொடங்கி  நடைபெற்று வருகிறது.

இன்றைய கேள்வி நேரத்தில்,  பாஜக சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்,  நயினார் நாகேந்திரம்  கேட்கும் ஒவ்வொரு கோரிக்கையையும் அன்போடு பரிசீலிப்போம் என  பதில் கூறிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், “நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளுக்கு இடையே மலைகள் உள்ளது. எனவே இங்கு சுரங்க பாதைகள் அமைத்து இரு அணைகளையும் ஒன்றாக ஆக்கினால் நெல்லை மாவட்ட மக்களுக்கு மேலும் பயன் உள்ளதாக இருக்கும்” என கோரிக்கை விடுத்தார்.

அவருக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, “இதற்கு வனத்துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும்” என கூறினார்.

உடனே நயினார் நாகேந்திரன் அதற்கு “நான் அனுமதி வாங்கி தருகிறேன்” என்று தெரிவித்தார்.