லக்னோ,
தேர்தல் பிரச்சார மேடையில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஒருவர் தன்னைத் தானே செருப்பால் அடித்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளின் ஆயுட்காலம் வரும் மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து அந்த மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டசபைக்கு வரும் 11ந் தேதி முதல் மார்ச் 8ந்தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
இங்கு ஆளும் சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ஆனால், இந்த கூட்டணிக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தேர்தல் பிரசார மேடையில், அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புலந்த்ஷல் தொகதி சமாஜ்வாடி வேட்பாளர் சுஜட் அலம் என்பவர் தனது தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார மேடையில் தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்டார் .
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, அவர் நான் ஏற்கனவே தெரியாமல் செய்த தவறை மன்னித்து விடுங்கள் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
https://www.youtube.com/watch?v=d4uOAIoNZBU&feature=youtu.be