டில்லி,
மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாரதியஜனதாவை சேர்ந்தவர்களை தலைவர் களாக நியமனம் செய்துள்ளது மத்திய அரசு.
இது அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழுவில் பா.ஜ.வினர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது மேலும் ஆறு பிஜேபி உறுப்பினர்களை பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கயாக மத்திய அரசு நியமித்து உள்ளது.
இதுகுறித்து, பணியாளர் மற்றும் பயிற்சி துறை (DoPT) வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட பட்டியலில் ஆறு பாஜக உறுப்பினர்களின் பெயர் உள்ளது.
இதுகுறித்து, மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு (ஏசிசி) அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் வாரியங்களில், குறைந்தது 10 பிஜேபி உறுப்பினர்களை ஜனவரி 24 ம் தேதி நியமித்துள்ளதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
1. ஒடிசா பாஜக துணைத் தலைவர் ராஜ்கிஷோர் தாஸ், 2014 ல் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர். அவர் ஹிந்துஸ்தான் ஃபுளுரோகார்பன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு தனி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. முன்னாள் வதோதரா மேயர் ஜோதி கவுஷல் செத், உரங்கள் மற்றும் ரசாயன்ங்கள் திருவாங்கூர் லிமிடெட் (FACT) என்ற, நிறுவனத்தின் தலைமைக் குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளார்.
3. கங்கிடி மனோகர் ரெட்டி ( 2009 ஆந்திரப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் பாஜக வேட்பாளர்) FACT நிறுவனக் குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்திடம் அவர் கொடுத்துள்ள உறுதிச்சான்றின் படி, ரெட்டி வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
4. குஜராத் பாஜக ஊடகத் துறை தொகுப்பாளர் ஹர்ஷத் ஏ படேல், முனைவர் பட்டம் பெற்றவர், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு சின்ன ரத்னா பொதுத்துறை நிறுவனமான EdCIL (இந்தியா) லிமிடெட் என்ற நிறுவனத்தின் தனி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. பா.ஜ.வின் மகிளா மோர்ச்சா பிரிவின் தேசிய பொதுச் செயலாளர் எல்.விக்டோரியா கவுரி கப்பல் அமைச்சகத்தின் கீழ் வரும் காமராஜர் போர்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
6. விசாகா ஷைலானி (டில்லியில் 2012 ஆம் ஆண்டு நகராட்சி தேர்தலில் போட்டியிட்டவர்) தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தனி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஷாசியா இல்மி, ரஜிகா கச்சேரியா, அசிஃபா கான், சுரமா பதி மற்றும் கிரண் கய் சின்ஹா உட்பட 10 பா.ஜ.க தலைவர்கள் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
,பொறியாளர்கள் இந்தியா லிமிடெட், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், நேஷனல் அலு மினியம் கம்பெனி லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், போன்ற உயர்ந்த பொதுத் துறை நிறுவனங்களின் வாரியங்களில், நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் அளித்துள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும், அதன் விசுவாசிகள் பல பொதுத்துறை நிறுவனகளில், குறிப்பாக வங்கிகளில் தனி இயக்குனர்களாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.