பீகார் மாநிலத்தில் அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

அந்த மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதீஷ்குமார் முதல்-அமைச்சராக இருக்கிறார்.வரும் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து ஒரு அணியாக போட்டியிடுகிறது.

ஆர்.ஜே.டி.-காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ’மகாபந்தனம்’ என்ற அணியை உருவாக்கியுள்ளன. ’நிதிஷ்குமரை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது’’ என முரண்டு பிடித்த வந்த லோக் ஜனசக்தி, வேறுவழி இன்றி தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் நிதீஷ்குமாரை மட்டம் தட்டும் வகையில் ,’’பீகாரில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது’’ என அந்த மாநில பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இவர் பீகாரில் துணை முதல் –அமைச்சராகவும் இருக்கிறார்.

‘’ பீகார் மாநிலத்தில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம்,மற்றும் ஆர்.ஜே.டி.ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே பலம் வாய்ந்த கட்சிகள்’’ என கூறியுள்ள சுஷில் மோடி’’ பீகாரில் கூட்டணி ஆட்சியே அமையும்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

பீகாரில் பலம் வாய்ந்த கட்சி என அவர் குறிப்பிட்டுள்ள , மூன்று கட்சிகளில் ஒன்று, லாலு பிரசாத்தின் ஆர்.ஜே.டி.
அதாவது நிதீஷின், ஜென்ம விரோத கட்சி.

-பா.பாரதி.