டெல்லி: விவசாயிகள் போராட்டம் காரணமாக, அவர்கள் டெல்லிக்குள் புக முடியாதவாறு, டெல்லி எல்லையில் காங்கிரிட்டால் ஆன தடுப்புகள் போடப்பட்டடிருந்தன. அந்த  தடுப்புகள் இன்று அகற்றப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மற்றும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லி எல்லையில் குவிந்த விவசாயிகளால், அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும், சாலை கான்கீரிட்டில் தடை ஏற்படுத்தப்பட்டு, போராட்டக்காரர்கள், பொதுமக்கள் டெல்லிக்குள் நுழைய முடியாதவாறு தடை ஏற்படுத்தப்பட்டது. சுமார் ஒராண்டு காலமாக விவசாயிகளால், நெடுஞ்சாலை முடக்கப்பட்ட விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் விவசாயிகளைளை கடுமையாக சாடியதுடன், சாலையை மறித்து போராட உரிமை இல்லை என்றும் தெரிவித்தது,. சாலையில் போடப்பட்டிருந்த தடைகளை அகற்றவும் மாநில, மத்திய அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று திக்ரி, காஷிபூர் எல்லையில் போடப்பட்டிருந்த தடுப்புகள் காவல்துறையினரால் அகற்றப்பட்டது.

டெல்லி-ஹரியானா எல்லையான திக்ரியில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டது. அதுபோல,டெல்லி-உத்தர பிரதேசம் மாநில  எல்லையான காஜிபூர் பகுதியில் போடப்பட்டிருந்த சாலை தடுப்புகளும் அகற்றப்பட்டன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டெல்லி கிழக்கு டிசிபி பிரியங்கா காஷ்யப், இந்த இடத்தில் போடப்பட்டிருந்த  தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதை திறக்கப்பட வேண்டும் என எங்களுக்கு உத்தரவு வந்தது. அதைத்தொடர்ந்து தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளன.  தற்போது  NH9, NH 24 திறக்கப்பட்டு உள்ளன.  இந்த சாலையை  போக்‍குவரத்துக்‍கு பயன்படுத்த பொதுமக்‍களுக்‍கு அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.