
புதுச்சேரி:
மாநில நிர்வாகத்தை நடத்த முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் அதிகாரம் உள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரியில் மாநில அரசுக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக மாநில அரசு செயல்பாடுகளில் கவர்னர் மூக்கை நுழைத்து வருகிறார். இதையொட்டி இரு தரப்புக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் விவசாய கடன் தள்ளுபடி, வாரியத்தலைவர் நியமனம் மற்றும் பதவி நீட்டிப்பு போன்ற விவகாரங்களில் கிரண்பேடி தலையிட்டு பிரச்சினை செய்து வந்தார்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் விதித்த தடையை மத்திய அரசு நீக்கி உள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, மாநில நிர்வாகத்தை நடத்த முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறினார்.
அரசு கோப்புகளை தாம் தேக்கி வைத்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது என்றும், மத்திய அரசின் நம்பிக்கையை இழந்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]