ஜெருசலேம்:
இயேசுவின் கல்லறை உள்ள பழங்கால தேவாலயம் மூன்று நாள் கதவடைப்புக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
ஜெருசலேமில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான செபுல்ஜெரி தேவாலயத்தில்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்து, பின் புத்துயிர் பெற்றதாக கிறிஸ்துவ மக்கள் நம்புகிறார்கள்.
இஸ்ரேலிய அரசு சமீபத்தில் புதிய சொத்து வரி மற்றும் வரி விதிப்புகளை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேவாலய நிர்வாகத்தினர், மூன்று தினங்களாக தேவாலயத்தை மூடினர்.
இந்த நிலையில் கதவடைப்பு போராட்டம் முடிவுக்கு வந்து இன்று மீண்டும் தேவாலயம் திறக்கப்பட்டது.