சென்னை:
திமுக அரசு கலைஞர் பெயரிலிருந்த பல்வேறு திட்டங்களை நீக்கியது என்று  அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பொன்முடி,  அதிமுக அரசு கலைஞர் பெயரிலிருந்த பல்வேறு திட்டங்களை நீக்கியது என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் என்று அதிமுக பெயர் மாற்றம் செய்தது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அண்ணா சிலையின் கீழ் இருந்த கருணாநிதி பெயரை மறைத்தது, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தைப் பசுமை வீடு என்று மாறியது என்று தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.