சென்னை: நடிகர் விஜய் கட்சியான த.வெ.க.வின் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்டமாக கல்வி விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், நாளை மீதமுள்ள 39 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நடிகர், தனது கட்சயின தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில், 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். இளைய தலைமுறையினரை கவரும் நோக்கில் கடந்த இரு ஆண்டு களாக நடத்தப்பட்டு வரும் இந்த விழா, நடப்பாண்டும் ( 2025) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கல்வி விருது வழங்கும் விழாவின் முதல்கட்ட நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழா மே மாதம் 30ந்தேதி நடைபெற்றது. அப்போது 88 தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் கல்வி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று (ஜுன் 13ந்தேதி) 32 சட்டசபை தொகுதிகள் உடன் புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நாளை 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நாளை 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கி கவுரவிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.
