தேவையானவை;

வெங்காயம் – 2
தக்காளி – 5
காய்ந்த மிளகாய் – 4,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தனியா, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அள
செய்முறை :

முதலில் காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிசெய்து கொள்ள வேண்டும். பிறகு புளியை ஊறவைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்… புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

புளியின் பச்சை வாசனை போன பின்பு வறுத்து அரைத்த பொடியை சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன்  இறக்கி கொத்தமல்லி துவி பரிமாறவும்.