சிட்னி: முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலேயே அனைத்து வகையான போட்டிகளிலும் ஆடி, சாதனை படைத்த, இளம் வீரரான சேலம் நடராஜனை ஐசிசி பாராட்டி டிவிட் பதிவிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் முதன்முதலாக சேலம் நடராஜன் பங்கேற்று, அங்கு சென்றுள்ளார். அவர், அங்கு விளையாட்டிய அனைத்துப் பிரிவுகளிலும் (ஒருநாள், டி20, டெஸ்ட்) விளையாடி சாதனை படைத்துள்ளார்.
அறிமுகமான முதல் சுற்றுப்பயணத்திலேயே அனைத்து பிரிவுகளிலும் ஆடிய இந்தியர் என்ற சாதனைக்கு நடராஜன் சொந்தக்காரராகி உள்ளதாக ஐசிசி பாராட்டு தெரிவித்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கியுள்ள நடராஜன், இன்று நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் லபுஷேன், மேத்யூ வேட் ஆகிய விக்கெட்டைகள் நடராஜன் வீழ்த்தினார். மேத்யூ வேட் 45 ரன்கள் எடுத்திருந்தபோது, நடராஜன் பந்தில், ஷர்துல் தாகுரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதுபோல மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரும் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தங்களது முதல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். தமிழக வீரர்கள் 2 பேரும் சேர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, பொங்கல் பண்டிகைக்கு மேலும் இனிப்பு சேர்த்துள்ளனர்.
2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்துகொண்டு ஆடிய சேலம் நடராஜனின் ஆட்டம் வியக்கத்தக்க வகையில் இருந்தது. அதன் காரணமாக, அவர். இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்.
ஐபிஎல் முடிந்த கையோடு ஆஸ்திரேலிய தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டன. அதில், இடம்பெற்ற வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலக அணியில் இணைந்தார் நடராஜன். ஆனால், அவரை நெட் பவுலராகவே அணி நியமனம் செய்திருந்தது. முதல்போட்டியிலேயே நடராஜன் களமிறக்கப்படுவார் என தமிழக ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த இரு போட்டிகளிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து, கடைசி போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருந்தாலும் மனம் தளராக நடராஜன், ஆஸ்திரேலியாவின் பில்லர் லபுசானேவின் விக்கெட்டை வீழ்ததி சர்வதேச அரங்கில் புகழ்மாலை சூடினார். இருந்தாலும் அணி நிர்வாகமும் நடராஜனை களமிறக்க தயங்கியே வந்தது. ஆனால், இறைவன் அவருக்கு கைகொடுத்தார் என்றுதான் கூற வேண்டும். பெரும்பாலான பவுலர்கள் ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்தடுத்து போட்டிகளில் வெளியேற சைனி, சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நடராஜன் நெட் பவுலராகவே தொடர்ந்து வந்தார். இருந்தாலும், இடையிடையே அவர் களமிறக்கப்பட்டு வந்தார்.
ஆனால், களமிறங்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நடராஜன் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில், தற்போது சிட்னியில் நடைபெற்று இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் நடராஜன் களமிறக்கப்பட்டு உள்ளார். அணியின் மெயின் பவுலர் பும்ரா காயம் காரணமாக விலகினார். இதனால் தான் வேறு வழியில்லாமல் நடராஜன் கடைசி போட்டியில் களமிறக்கப்பட்டார்.
வாய்ப்பை சாரியாக பயன்படுத்தி, நான் தமிழன்டா என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் 300ஆவது வீரராகக் களமிறங்கிய நடராஜன் இந்தபோட்டியில் முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
முதல் விக்கெட்டாக மேத்யூ வேடின் விக்கெட்டை வீழ்த்தினாலும், நீண்ட நேரமாக சதமடித்து ஆடி வந்த லபுசானேவின் விக்கெட்டை தூக்கி அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார் நடராஜன்.
நடராஜன் சாதனைக்கு ஐசிசி புகழ்மாலை சூட்டியுள்ளது. இதுதொடர்பாக, ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்த உள்ளது.
அதில், ஒரு சுற்றுப்பயணத்தின்போது ஒரு நெட் பவுலராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட வீரர், அந்தத் தொடரின் அனைத்துப் பிரிவுகளிலும், (ஒருநாள், டி20, டெஸ்ட்) ஆடி, முழு தொடருக்கும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நடராஜன் பெற்றிருக்கிறார் என்று தெரிவித்து உள்ளது.