
மாஸ்டர் படத்துக்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் விஜய். சன் பிசர்ஸ் தயாரிக்க இருந்த இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் சன் பிக்சர்ஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய தமனிடம் விஜய்யுடன் உங்கள் கூட்டணியை விரைவில் எதிர்பார்க்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘ஆம்’ என்று பதிலளித்துள்ளார் தமன். எனவே விஜய்யின் அடுத்த படத்தில் தமன் இசையமைக்க வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.
[youtube-feed feed=1]Yes yes 🤗 https://t.co/Lb1zWk5JJB
— thaman S (@MusicThaman) March 4, 2021