தளபதி 69 பட தயாரிப்பு குறித்த புதிய அப்டேட் இன்று வெளியானது இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு-வின் தரமான இயக்கத்தில் வெளியான ‘கோட் – தி கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இரட்டை வேடமேற்று விஜய் நடித்திருந்த இந்தப் படம் அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையிலும் ரசிகர்களை தியேட்டரில் கட்டிப்போடும் வகையிலும் திரைக்கதை அமைத்திருந்தார் வெங்கட் பிரபு.

அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் இந்தப் படத்துடன் தனது நடிப்பை நிறுத்திவிட்டு அரசியலில் கவனம் செலுத்துவார் என்று கூறப்பட்டது.

விஜய் தனது நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா அல்லது கமா போட்டு தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் ஒன் மோர் டைம் (One More Time) என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்தனர்.

இந்த நிலையில் விஜய் தனது நடிப்பை கமா போட்டு தொடர்வார் என்பதை 69 பட போஸ்டர் மூலம் மேற் குறியிட்டு காட்டியுள்ளனர்.

ஜனநாயகத்தின் ஜோதி ஏந்துபவர் வருகிறார் என்ற அடைமொழியுடன் வெளியாகி உள்ள இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அரசியல் சார்ந்த படமாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

‘KVN Productions’ என்கிற கன்னட திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரிப்பதாக புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

வினோத் இயக்கவுள்ள தளபதி 69 படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார், மற்ற நடிகர் நடிகைகள் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.