கொரோனா ஊரடங்கு தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டிய படங்களை ஒடிடிக்கு கொண்டு வந்திருக்கிறது, விஜய் படமொன்றும் ஒடிடிக்கு வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டு வெளியானபடம் ஜில்லா. நீசன் இயக்கி இருந்தார். நடிகர் விஜய், மோகன்லால் இணைந்து நடித்திருந்தனர். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழில் இப்படம் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இப்படம் தெலுங்கு மொழியிலும் எடுக்கப்பட்டது.
சூப்பர் குட் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்தது. ஆனால் சில காரணங்களால் தெலுங்கில் ஜில்லா வெளியாகவில்லை. இப்படத்திற்காக தெலுங்கு நடிகர் பிரம்மானந்தாவின் காமெடி காட்சிகள் படமாக்கப்பட்டன. அவை தமிழில் எடிட்டிங் செய்யப்பட்டது. தற்போது தெலுங்கு ஜில்லா ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதில் பிரம்மானந்தா நடித்த காட்சிகள் இணைக்கப்படுகின்றன.

[youtube-feed feed=1]