தைப்பூச விழா மலேசியாவில் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையை நிறைவேற்றினர்.
இங்குள்ள பத்துமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால் குடம் ஏந்தியும் 272 படிகளில் ஏறி முருகனை வழிபட்டனர்.
34 மில்லியன் மக்கள்தொகையில் ஏழு சதவீதம் இந்திய இனத்தவர்கள் வசிக்கும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பன்முக கலாச்சார மலேசியாவில் தைப்பூசத் திருவிழா சிறப்பு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
முக்கியமாக தமிழ் இந்துக்களுக்கு மிக முக்கியமான மதப் பண்டிகைகளில் ஒன்றான இந்த நிகழ்வு உள்ளது.
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிஜி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட இந்து தமிழ் சமூகங்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புறநகரில் உள்ள பத்து மலையில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தவும் ஊர்வலங்கள் மற்றும் சடங்குகளைக் காண பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் திரண்டனர்.