கோன் ரட்சசிமா, தாய்லாந்து

தாய்லாந்தில் ல் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தி  21 பேரைக் கொன்ற ராணுவ வீரரை அந்நாட்டுக் காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது.

தாய்லாந்தில் வடகிழக்கு பகுதியில் உள்ள நகோன் ரட்சசிமா என்னும் நகரில் ஒரு பிரபல ஷாப்பிங் மாலமைந்துள்ளது.    இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு ராணுவ முகாமில் இருந்து நேற்று ஒரு ராணுவ வீரர் இயந்திரத் துப்பாக்கியை எடுத்து வந்து அந்த மாலுக்குள் சென்றுள்ளார்.   தனது அருகில்  இருந்த சகவீரரை அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து அனைவரும் மீளும் முன்பு அங்கிருந்த மக்களை நோக்கி அந்த ராணுவ வீரர் சரமாரியாகச் சுட்டுள்ளார்.  பயந்த மக்கள் அலறிக் கொண்டு ஓடி கார்கள் மற்றும் மறைவிடங்களின் பின் ஒளிந்துக் கொண்டனர்.   இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்தும் அந்த வீரர் தப்பி ஓடி விட்டார்.

காவல்துறையினர் விசாரணையில் அந்த வீரர் பெய்ர் ஜக்கர்பாந்த் தொம்மா என்பது தெரிய வந்துள்ளது.   அவர் தனது முகநூல் பக்கத்தில் துப்பாக்கியை ஏந்தியபடி தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  நேற்று இரவு முழுவதும் அவரை தேடிய காவல்துறையினர் அவர் வணிக வளாகம் ஒன்றில் பதுங்கி இருந்ததைக் கண்டறிந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ராணுவ வீரர் எதற்காக இந்த திடீர் தாக்குதலை நடத்தினார் என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை.