பாங்காக்:
தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (வயது 88) இன்று காலமானார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சிபுரிந்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்.
1946ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற மன்னர் பூமிபால் இன்று (மரணமடையும்வரை) 70 ஆண்டுகளாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகிறார்கள்.
மன்னர் பூமிபால் தாய்லாந்து நாட்டின் அரசராக 1946-இல் பதவியேற்று 70 ஆண்டுகள் கோலோட்சியிருக்கிறார். அவரின் மறைவினால் தாய்லாந்து நாடு ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது. நாட்டி அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல்கள் நிலவிய காலகட்டங்களில் கூட தனது உறுதியான நடவடிக்கைகளால் நாட்டை வேகமாக வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற பெருமை மன்னரையே சாரும்.
அரண்மனை மன்னரின் மறைவுக்கான தெளிவான காரணங்களை கொடுக்காவிட்டாலும் அவர் கடந்த ஆண்டிலிருந்து வெவ்வேறு உடல் உபாதைகள் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது. “சரியாக மாலை 3:52 மணிக்கு நமது மேன்மைதங்கிய மன்னர் காலமானார்” என்று அரண்மைனையிலிருந்து வந்த அறிக்கை கூறுகிறது. அவரது மகனான 63 வயது இளவரசர் மகா வஜிரலோங்கோர்ன் புதிய அரசராக விரைவில் அரியணையில் அமர்த்தப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அரசர் அனுமதிக்கப்பட்டிருந்து மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். அரசரின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டதும் அவர்கள் கதறி அழுதனர். இளவரசர் மகா வஜிரலோங்கோர்ன் இதுவரை அதிகமாக பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டதோ அல்லது வெளிப்படையாக அரசு தொடர்பான காரியங்களில் ஈடுபட்டதோ இல்லை. ஆனால் மன்னர் பூமிபால் உடல்நலக்குறைவினால் அதிகமான செயல்பட முடியாமல் இருந்த கடந்த இரு ஆண்டுகளாகத்தான் அவர் பொது நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். தாய்லாந்தில் அடுத்த சில மாதங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிகிறது. துக்க நாட்கள் முடிந்த பின்னரே புதிய அரசரின் பதவியேற்பு விழா நடைபெறும்.
கடந்த 2008-இல் அரசரின் சகோதரி மரணமடைந்த போது அரசு 100 நாட்களை துக்க நாட்களாக அறிவித்தது. ஆனால் அவருக்கான இறுதிச்சடங்குங்கள் 10 மாதங்களுக்கு பிறகுதான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.