டில்லி
ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டாம் என தப்லிகி ஜமாத தலைவர் பேசியதாக வெளியான ஆடியோ போலி என டில்லி குற்றவியல் பிரிவு கூறி உள்ளது.
கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி சுமார் 2000க்கும் ஏற்பட்ட மக்களைத் திரட்டியதாக தப்லிகி ஜமாத்தின் கீழ் இயங்கும் அலாமி மார்க்கஸ் மசூதி நிர்வாகக் குழுவைச் சேர்ந்த மவுலானா சாத் கந்தால்வி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. டில்லி காவல்துறை இந்த வழக்கை ஐபிசி 304 அதாவது கொலைக்குற்றம் அற்ற மரணத்தை விளைவிக்கும் செயல் என்னும் பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
டில்லியில் ஹஸ்ரத் நிஜாமுதின் காவல் நிலைய அதிகாரி முகேஷ் வாலியா அளித்த புகாரின் அடிப்படையில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. அதில் நடந்த விசாரணையில் மார்க்கஸ் உறுப்பினர் ஒருவரின் மடிக்கணினியில் இருந்து மவுலானா சந்த் கந்தால்வி பேசியதாக 350 ஆடியோ பதிவுகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இவற்றை டில்லி குற்றவியல் பிரிவு காவல்துறையின ஆய்வு செய்தனர்.
இந்த முதல் கட்ட ஆய்வில் எஃப் ஐ ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள ஆடியோவில் ம்வுலானா, “சமுக விலகல் என்பது இஸ்லாம் மதத்தில் எழுதப்படவில்லை. உரடாங்கு உத்தரவினை நீங்கள் பின்பற்ற வேண்டாம்” எனக் கூறியதாகச் சொல்லப்படும் ஆடியோ பதிவுகளை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது இந்த் ஆடியோ போலியானது எனவும் இது 20 ஆடியோக்களை வெட்டி ஒட்டப்பட்டு மாற்றி மைக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே டில்லி சிறப்பு காவல்துறை ஆணையர் பிரவிர் ரஞ்சன், “மவுலானா பேசி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஆடியோ பதிவை நாங்கள் தட்வியல் நிபுணர்களின் சோதனைக்கு அனுப்பி உள்ளோம். தப்லிகி ஜமாத் நடத்திய நிகழ்வு அரசின் வழிகாட்டுதல் எதையும் பின்பற்றாமல் நடந்தது என்பதற்கான மேலும் ஆதாரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த ஆடியோ குறித்த தக்வல்கள் வந்த பிறகு பிரவீர் ரஞ்சன் செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் உள்ளார். மேலும் அவருக்கு வரும் தொலைப்பேசி அழைப்புக்களையும் அவர் எடுப்பதில்லை எனச் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.