டெக்சாஸ்: அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள், இரு ஆசிரியர் உட்பட 21க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த ஆசிரியையின் கணவர் துக்கத்தால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரில் உள்ள ராப் தொடக்கப்பள்ளியில் (Robb Elementary School in Uvalde, Texas) கடந்த 25ந்தேதி 18 வயது நபர் ஒரு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், 18 குழந்தைகள், ஒரு ஆசிரியை இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், அந்த நபர் கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து, கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை 11:32 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு தொடங்கியது, மேலும் தாக்குதல் நடத்தியவர் “இந்த சம்பவதின் போது தனியாகச் செயல்பட்டார்” என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் வாலிபர் தனது பாட்டியை சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆசிரியர் ஒருவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராப் தொடக்கப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் டியா இம்ரா ஜோ கார்சியா. இவர் அந்த தொடக்கப் பள்ளியில் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டின்போது, துப்பாக்கிதாரியால் கொல்லப்பட்ட இரண்டு ஆசிரியர்களில் திருமதி கார்சியாவும் ஒருவர். திருமதி கார்சியாவுக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மனைவி இறந்த துக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரது கணவர் ஜோ கார்சியா திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ஆசிரியை கார்சியாவின் மருமகன் ஜான் மார்டினெஸ், தனது மனைவியின் கொலையை அடுத்து கார்சியா “துக்கத்தால் காலமானார்” என்று கூறியுள்ளர். மற்றொரு உறவினர், எனது தியா இர்மாவின் கணவர் ஜோ கார்சியா துக்கத்தால் காலமானார் என்று ஆழ்ந்த வருத்தத்துடன் கூறுகிறேன், நாங்கள் அனைவரும் எப்படி உணர்கிறோம் என்பதை அறிய நான் வார்த்தைகளை இழக்கிறேன், தயவுசெய்து எங்கள் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள், கடவுள் எங்கள் மீது கருணை காட்டுங்கள், இது எளிதானது அல்ல என்று கூறியுள்ளார்.
அதுபோல உள்ளூர் செய்தி நிறுவனமான ஃபாக்ஸ் துணை நிறுவனம் கார்சியா மாரடைப்பால் இறந்ததாக அறிவித்தது. கார்சியாஸ் 12 முதல் 23 வயது வரையிலான நான்கு குழந்தைகளை விட்டுச் செல்கிறார் – இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு பெண்கள். உவால்டே பள்ளியில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச் சூட்டின்போது, “அவரது கடைசி மூச்சு வரை குழந்தைகளை அவரது கைகளில் தழுவியிருந்தார்”. “அவர் தனது வகுப்பறையில் குழந்தைகளைப் பாதுகாக்க தன்னை தியாகம் செய்தார்,” என்று புகழாரம் சூட்டி உள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மற்றாரு ஆசிரியையான ஈவா மிரெல்ஸும் , இவரும் ஐந்து வருடங்கள் ஒன்றாகக் கற்பித்துக் கொண்டிருந்தார்கள், அவர்களுக்கு இடையே 40 வருடங்களுக்கும் மேலான அனுபவம் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.