இரண்டு நேர மண்டலங்கள் இந்தியாவில் சாத்தியமா : பரிசோதிக்கும் அரசு

Must read

தாநகர், அருணாச்சல பிரதேசம்

ந்தியாவில் இரண்டு நேர மண்டலங்கள் கொண்டு வந்தால் அது நடைமுறைக்கு ஒத்து வருமா என அரசு பரிசோதனை செய்து வருகிறது.

இந்தியா ஒரு பரந்து விரிந்த நாடு.  தற்போது ஒரே நேர மண்டலத்தைக் கொண்டுள்ளது.  அதன்படி மேற்கு எல்லையில் இருந்து கிழக்கு எல்லை வரை ஒரே நேரம் பின்பற்றப்படுகிறது. உதாரணத்துக்கு அந்தமான் நிக்கோபாரில் உள்ள அதே நேரம் கிழக்கு எல்லை மாநிலங்களிலும் பின்பற்றப் படுகிறது.

அருணாசலப் பிரதேச முதல்வர் பேமா காண்டு இரண்டு நேர மண்டலங்கள் அமைப்பது சிறந்தது என கருத்து தெரிவித்தார்.  ”கிழக்கு எல்லையில் சூரியன் உதிக்கும் போது மேற்கு  எல்லையில் மிகவும் இருளாக இருக்கும்.  இதே போல அலுவலக நேரமும் பொதுவாக 10 முதல் 5 என இருப்பதால் வெளிச்சம் இல்லாத நேரத்தில் வேலைகளை ஆரம்பித்து வெளிச்சம் இருக்கும் போதே வேலைகளை முடித்து விட வேண்டும். அதுமட்டுமின்றி மின்சாரம், மற்றும் பல சக்திகள் விரயமாகின்றன” என அவர் தன் கருத்தை  சொல்லியிருக்கிறார்.

அவர் கருத்தையொட்டி, விஞ்ஞானம் மற்றும் தொழில் துறை காரியதரிசி அசுதோஷ் சர்மா இரண்டு நேர மண்டலம் அமைப்பது குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.  இந்த பரிசோதனையின் முடிவில் இரண்டு நேர மண்டலம் அமைப்பதால் ஏற்படும் விளைவுகளை அறியலாம்.    அதன்பின் இரண்டு நேர மண்டலங்கள் அமைப்பது பற்றிய முடிவு தெரியவரும்.

இதே போல் ஒரு ஆய்வு 2012ஆம் ஆண்டு நடைபெற்றது.  அந்த ஆய்வின் முடிவில் இரண்டு நேர மண்டலங்களுக்கு பதிலாக தற்போதைய இந்திய நேரத்தை அரைமணி நேரம் முன்கூட்டினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டது.  அதன் படி தற்போது உத்தரப்பிரதேச அலகாபாத் அருகில் உள்ள நேரத்தை கணக்கிடுவதற்கு பதிலாக அசாம் – வங்காள எல்லை அருகில் கணக்கிட வேண்டும்.   ஆனால் இந்த முடிவுக்கு யாரும் வரவேற்பு அளிக்காததால் அமுலுக்கு வரவில்லை.

Please also read our previous post :/https://patrikai.com/change-time-arunachal-pradesh-request/

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article