சென்னை

ல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசன் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.   அப்போது அவர் இஸ்லாமியர்கள் பகுதியில் பேசும் போது  இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து என கூறினார்.   இதற்கு மாநிலம் எங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.   அதனால் அவர் இரு நாட்களுக்கு பிரசாரத்தை ஒத்தி வைத்தார்.

அதன் பிறகு அவர் கலந்துக் கொண்ட கூட்டங்களில் அவர் மீது செருப்பு, முட்டை உள்ளிட்டவை வீசப்பட்டன.    கமலஹாசனின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது பல இடங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளன.   அதனால் அவர் தற்போது முன் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.

இன்று கமலஹாசன் செய்தியாளர்களிடம், “எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர். அந்தந்த மதங்களுக்கு அந்தந்த மதத்தினர் தீவிரவாதிகளாக உள்ளனர். இதில் எந்த ஒரு மதத்தை மட்டும் தனியாக சொல்ல முடியாது.   சரித்திரத்தை பார்த்தால் உங்களுக்கே எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளது தெரிய வரும்.

நான் கைதுக்கு பயப்படுபவன் இல்லை.   ஆனால் எனது பிரசாரம் தடை படக் கூடாது என்பதற்காக முன் ஜாமீன் கோரி உள்ளேன்.  என்னை கைது செய்வது பற்றி கவலை இல்லை.  ஆனால் என்னை கைது செய்தால் வீண் பிர்ச்சினை உருவாகும்.   இது எனது வேண்டுகோள் இல்லை அறிவுரை” என தெரிவித்துள்ளார்.