ண்டன்

ண்டன் ஃபின்ஸ்பர்ரி பார்க் மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வந்த இசுலாமியர்கள் மீது வேகமாக வந்த வேன் ஒன்று மோதியதில் ஏராளமானோர் மரணம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இன்று அதிகாலை வடக்கு லண்டனில் உள்ள ஃபின்ஸ்பர்ரி பார்க் மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வெளியே மக்கள் வந்துக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த வேன் ஒன்று மக்கள் கூட்டத்தினுள் புகுந்தது.  மக்கள் அலறியபடி ஓடினர்.

வேன் மோதியதில் ஒருவர் மரணமடைந்தார்,  10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர், என செய்திகள் வெளியான போதிலும் மக்கள் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சுகின்றனர்.  காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள், அந்த வேன் வெகுநேரமாக தெருவில் நின்றுக் கொண்டிருந்ததாகவும், மக்கள் வெளியே வரத் துவங்கியதும் ஓட்டி வரப்பட்டு வேண்டுமென்றே மோதியதாகவும் கூறுகின்றனர்.   வேனில் 3 பேர் இருந்ததாகவும், வேன் ஓட்டுனருடன் அவர்களும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.   ஆனால் விபத்தைக் கண்ட ஒரு பெண் ஓட்டுனர் கைது செய்யப்பட்டதையோ, விபத்துக்கு காரணமான வேனையோ யாரும் இந்த தாக்குதலுக்குப் பின் பார்க்கவில்லை என பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்..

இந்த சம்பவம் ஒரு கொடூரமான தீவிரவாத தாக்குதல் என லண்டன் மேயர் சாதிக் கான், மற்றும் பிரதமர் மே கண்டனம் தெரிவித்துள்ளனர்.  அனைத்து அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தீவிரவாதிகள் கத்தியால் குத்தி பலரைக் கொன்ற நிகழ்வின் தாக்கத்தில் இருந்து லண்டன் வாசிகள் மீண்டு வரும் நேரத்தில்  மற்றொரு தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்துள்ளது, மிகவும் வருந்தத்தக்கது