துருக்கி தலைநகர் அங்காரா-வில் உள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TUSAS) மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

துருக்கி அரசுத் துறை நிறுவனமான TUSAS மீதான இந்த தாக்குதலை நடத்தியவர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

விமானப்படை விமானங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரையும் உயிருடன் விடப்போவதில்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் பிரிக்ஸ் மாநாட்டிற்காக ரஷ்யா சென்றுள்ள நிலையில் நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.