டெல்லி: மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 10ம் கட்ட பேச்சு வார்த்தை டெல்லியில் தொடங்கியது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் 57வது நாளாக டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர்.
மத்திய அரசுடன் 9 கட்டப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்பட வில்லை. வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று இரு தரப்புக்கும் இடையே 10ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.