லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் அதிக ஒலியுடன் சீறிப் பாய்ந்ததை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ தளபதி ஃபூவத் ஷுக்கர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டு ஒருவாரம் ஆன நிலையில் ஹிஸ்புல்லா தலைவர் சைய்யத் ஹசரேன் நஸ்ரல்லா தலைமையில் பெய்ரூட்டில் இன்று நினைவுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் இஸ்ரேல் போர் விமானங்கள் பெய்ரூட் மீது பறந்து சென்றது கண்களுக்கு தெரியும் வகையில் மிகவும் தாழ்வாக பறந்த இந்த சூப்பர் சானிக் ரக போர் விமானங்கள் ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.