உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரும் விம்பிள்டன் நடப்பு சாம்பியனுமான நோவாக் ஜோக்கொவிச் ஆடுகளத்தில் எடுத்த தனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததோடு அதுகுறித்து ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

விம்பிள்டன் போட்டி இரண்டாவது சுற்று ஆட்டத்தில் நேற்று தென்னாப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை 6-3, 6-3. 6-3 என்ற நேர் செட்டுகளில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

நேற்றைய போட்டியின் போது ஒரு கட்டத்தில் ஆண்டர்சன் அடித்த பந்தை திருப்பி அடிக்க முற்பட்ட ஜோக்கொவிச் தன்னால் முடிந்தவரை தன் கை மற்றும் கால்களை அகல விரித்து அந்த பந்தை திரும்ப அடித்தார்.

அவரது இந்த ஆட்டத்தை படம்பிடித்த கேமெராவின் ஒரு புகைப்படம், ஸ்பைடர்மேன் போன்று சேட்டை செய்வதாக உணர்த்தியது.

இந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஜோக்கொவிச் ரசிகர்கள் தங்கள் கருத்தை மீம்ஸாக வெளியிடலாம் என்று கூறியிருந்தார், அவரின் கோரிக்கையை ரசிகர்கள் ஏமாற்றவில்லை என்பது அவருக்கு வந்த டிவீட்களே கூறுகிறது.

https://twitter.com/Mike10ii/status/1410298841333526528