டெல்லி

த்திய அரசு இந்திய ராணுவம் மற்றும் விமான்ப்படைக்கு 156 ஹெலிகாப்டர்களை ரு.45000 கோடியில் வாங்க ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் 156 பிரசந்த் ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்புத் துறை கொள்முதல் குழு ஒப்புதல் அளித்து. இதில் 90 ஹெலிகாப்டர்கள் ராணுவத்துக்காகவும், 66 ஹெலிகாப்டர்கள் விமானப் படைக்காகவும் வாங்கப்படுகின்றன. இந்த ஹெலிகாப்டர்களில் 5.8 டன் எடையுள்ள இரட்டை என்ஜின் இடம் பெற்றுள்ளது.

இந்திய ராணுவம் மற்றும் விமான்ப்படைக்கு 156 ஹெலிகாப்டர்களை ரு.45000 கோடியில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.  இந்த ஹெலிகாப்டர்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட உள்ளன.  ஒரே நேரத்தில் இத்தனை உள்நாட்டு ஹெலிகாப்டர்கள் ராணுவத்துக்கு வாங்குவது இதுவே முதல் முறையாகும்.

இவை பல்வேறு ஆயுதங்களைத் எடுத்து சென்று தாக்கும் திறனுடையது. மேலும் எதிரிகளின் கவச வாகனங்கள், பதுங்கு குழிகள், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் உள்ளிட்ட இலக்குகளையும் இந்த ஹெலிகாப்டர் மூலம் அழிக்க முடியும்.

இரவு நேரத் தாக்குதலுக்கு பயன்படுவதுடன், உயர மலைச் சிகரங்களையும் கடக்கும் வகையில் அதிக உயரத்திலும் இதனால் பறக்க முடியும். இத்னால் உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சினையும்  எட்ட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.