கர்நாடகா மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் ஒருசில நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் டெண்டர் விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மின் பயனீட்டை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஸ்மார்ட் மீட்டர் பயன்பாட்டை அடுத்து வணிக நோக்கில் பயன்படுத்தப்படும் மீட்டர்களுக்கு பகல் மற்றும் இரவு நேர கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் இரவு நேரங்களில் மின்வாரியத்தை மிளகாய் அரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வணிக பயன்பாடு தவிர, மின்மாற்றி பொருத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள், மோட்டார் பொருத்தப்பட்ட சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோருக்கு மின்கட்டணம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்காக டெண்டர் விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சட்டமன்றத்தில் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த முறைகேடு காரணமாக, வெளி மாநில நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க முடியவில்லை.

ஜீனஸ், ஷிண்டர் மற்றும் ஹெச்பிஎல் ஆகிய உள்ளூர் நிறுவனங்கள் மட்டுமே இந்த டெண்டரில் பயனடைந்துள்ளதாக அது கூறியுள்ளது.

பாஜக-வின் இந்த குற்றச்சாட்டு கர்நாடக எரிசக்தி அமைச்சகத்தை எரிச்சலடைய செய்துள்ள நிலையில், இதற்கு அந்த அமைச்சகம் உரிய விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.