கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலத்தில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. வர்த்தக நிறுவனங்கள், தொழிலகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போதைய ஊரடங்கில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த ஊரடங்கில் கொரோனா பாதிப்பைப் பொறுத்து அந்தந்த மாநிலங்கள் விதிகளைத் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் திரையரங்குகள், மதுக் கூடங்கள், வணிக வளாகங்கள் போன்ற பலரும் கூடும் இடங்களைத் திறப்பதற்கு தடை விதிக்கபட்டுள்ள்ளது
மேற்கு வங்கத்தில் தற்போதைய ஊரடங்கில் கோவில்கள், மசூதி, தேவாலயங்கள்,குருத்துவாரா உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். அந்த அடிப்படையில் இன்று அங்கு வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்னும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் குறைவான எண்ணிக்கையில் மக்கள் அனுமதிக்கபடுகின்றன்ர். எனவே மிகவும் குறைவான மக்கள் இன்று வந்தனர்.