புதுச்சேரி,
புதுச்சேரி மக்கள் தெய்வமாக வழிபடும் மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விட கிரண்பேடி உத்தரவிட்டதிற்கு புதுச்சேரி மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர்.
விரைவில் போராட்டம் நடைபெறும் என தெரிகிறது.
பிரபல மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரியில் அமைந்துள்ளது. இக்கோயில் பிரெஞ்சுக்கா ரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பேயுள்ள பழமை வாய்ந்த ஒரு கோவில் ஆகும்.
மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது என்றறியப்படுகிறது. புதுச்சேரியின் சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. புகழ் பெற்ற விநாயகர் கோயில்களில் குறிப்பிடத்தக்கதும் ஆகும்
இந்த கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு 6 வயதான பெண் யானை கொண்டு வரப்பட்டது. அதற்கு லட்சுமி என பெயர். அந்த கோவில் யானை அணிந்திருக்கும் வெள்ளிக்கொலுசு மிகவும் பிரபலம்.
லட்சுமி யானை தினமும் கோவில் முன்பு நிறுத்தப்படுவது வழக்கம். அதனிடம் பக்தர்கள் ஆசிர்வாதம் வாங்கி செல்வார்கள். இப்போது அதை காட்டில் விட வேண்டும் என்று சொல்வதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பீட்டா அமைப்பு கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் கவர்னர் கிரண்பேடி யானையை காட்டில் விடும்படி உத்தரவிட்டுள்ளார்.
கவர்னரின் இந்த உத்தரவுக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மதம் தொடர்பான விஷயங்களில் பீட்டாவின் பேச்சைக்கேட்டு கிரண்பேடி மூக்கை நுழைப்பதால் விரைவில் புதுச்சேரி இந்துக்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என தெரிகிறது.