வுலதாபாத்

த்திரப்பிரதேச மாநிலத்தில் 44 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கோவில்000 தற்போது திறக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசு உத்தரபிரதேச மாநிலத்தில் மூடப்பட்டு கிடக்கும் கோவில்களை வழிபாட்டிற்கு திறக்கும் முயற்சியில் ஈடுபடுள்ளது. இதில் ஒரு பகுதியாக் மொரதாபாத் மாவட்டத்தில் தவுலதாபாக் பகுதியில் உள்ள ஒரு கோவில் 44 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் திறப்பு விழா கண்டது.

இந்த க் கோவில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூடப்பட்டு அரசு நிர்வாக முயற்சியின் மூலம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலின் திறப்பு விழா காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. மேலும் மக்கள் ஏகோபித்த ஆதரவு அளித்ததால், எந்தவித எதிர்ப்பு மற்றும் அசம்பாவிதம் இன்றி கோவில் திறக்கப்பட்டுள்ளது.

கோவிலை திறந்த போது சில சிலைகள் சாய்ந்தும், மாயமாகியும் இருப்பது தெரியவந்தது. இந்தக் கோவில் நிர்வாகிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, அவற்றை சரி செய்யும் பணியில் இறங்கினர். இங்கு விரைவில் வழக்கமான வழிபாடுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.