சிர்பூர், தெலுங்கானா
மரம் நடு விழாவுக்கு தலைமை தாங்கிய பெண் வனத்துறை அதிகாரியை தெலுங்கானா சட்டப்பேரவை உறுப்பினரின் சகோதரர் தாக்கி உள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் காமேஸ்வரம் நிர்ப்பாசன திட்டத்துக்காக அரசு ஏராணமான மரங்களை வெட்டியது. இந்த வெட்டபட்ட மரங்களுக்கு பதிலாக சிர்பூர் மாவட்டத்தில் அரசு ஆயிரக்கணக்கில் நட ஏற்பாசு செய்தது. இந்த மரம் நடுவிழா நேற்று வனத்துறை அதிகாரி வனிதா என்பவர் தலைமையில் நடைபெற்றது. இதில் வனத்துறையினர் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அங்கு சிர்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் கோனேரு கொன்னப்பா வின் சகோதரர் கிருஷ்ணானா ராவ் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த அவரடு ஆதரவாளர்கள் வந்து வாக்குவாம் செய்ய தொடங்கினர். வாக்குவாதம் முற்றியதால் வனிதாவை அவரகள் தாக்க முயன்றுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பிக்க வனிதா அருகில் இருன்த டிராக்டர் மீது ஏறிக் கொண்டார்.
கிருஷ்ணா ராவ் விடாமல் வனிதாவை துரத்தி தடியால் தாக்கி உள்ளார். காயங்களால் துடித்த வனிதா கீழே விழுந்தார். அதற்குள் காவல்துறையினரும் வனத்துறையினரும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டது. கிருஷ்ண ராவி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து வனத்துறை அதிகாரி வனிதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். வனிதாவை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என அம்மாவட்ட நிர்வாகத்துகு தெலுங்கான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.