ஹைதராபாத்: தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் 25ம் தேதியன்று, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாநில சட்டமன்றம் விரைவில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் என்று அது குறித்த தனது மவுனத்தை உடைத்தார்.
“சிஏஏ என்பது மத்திய அரசு எடுத்த 100% தவறான முடிவு“, என்று ராவ் கூறியுள்ளார். “இந்தியா மக்களின் நாடு, மதங்களின் நாடு அல்ல. ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு எதிரான ஒன்றை நாங்கள் ஆதரிக்க வழி இல்லை. “
தெலுங்கானா அரசு அப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றினால், கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானுக்குப் பிறகு, சிஏஏ வை எதிர்க்கும் மாநிலங்களில் பட்டியலில் நான்காவதாக தெலுங்கானா சேரும்.
உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக முடிவெடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்று ராவ் கூறினார்.
“சிஏஏ அரசியலமைப்பிற்கு எதிரானது. நான் இந்த மசோதாவுக்கு எதிரானது“, என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் உரையாடும்போது கூறியதாக ராவ் தெரிவித்தார்.
மேலும் சிஏஏ குறித்து பல மாநில முதல்வர்களுடன் பேசியதாக ராவ் கூறினார்.
“நான் 16 முதல்வர்கள் மற்றும் அதிகாரத்தில் இல்லாத ஒரு சில பிராந்திய கட்சிகளுடன் பேசியுள்ளேன், அவர்கள் அனைவரும் கவலை தெரிவிக்கிறார்கள்“, என்று அவர் கூறினார். “வரும் மாதத்தில் ஹைதராபாத்தில் அனைத்து முதல்வர்களின் ஒரு மெகா மாநாட்டை நடத்துவதற்கான பெரிய வாய்ப்பு உள்ளது“, என்று அவர் மேலும் கூறினார்.
அவரது கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) மாநிலத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் பெரும் வெற்றியை எதிர்கொள்ளவிருக்கும் நேரத்தில் இந்த அறிக்கை வந்துள்ளது. வாக்குகளின் எண்ணிக்கை இன்னும் முடிவடையவில்லை.