தராபாத்

தெலுங்கு திரையுலக பிரமுகர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி அளித்த புகார் குறித்து விசாரிக்க அரசு தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

நடிகை ஸ்ரீரெட்டி தன்னை பல தெலுங்கு திரையுலக பிரபலங்கள் திரைப்பட வாய்ப்பளிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக ப்கார் அளித்து வந்தார். அவர் ஒரு சில பிரபலங்கள் தன்னுடன் இருந்த புகைப்படங்களையும் வெளியிட்டார். அத்துடன் தன்னிடம் தவறாக நடந்த அனைவரின் பெயரியும் தந்து ஸ்ரீலீக்ஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப் போவதாக மிரட்டி இருந்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ஸ்ரீரெட்டியை தெலுங்கு நடிகர் சங்கம் உறுப்பினர் அட்டையை ரத்து செய்தது. இவருடன் எந்த தெலுங்கு நடிகர்களும் பணி புரிய மாட்டார்கள் என சங்கம் அறிவித்தது. இதனால் கோபம் அடைந்த ஸ்ரீரெட்டி தெலுங்கு திரைப்பட சம்மேளனம் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தி கைதானார்.

விசாரணைக் குழு

அத்துடன் இவருக்கு ஆதரவாக பல மகளிர் அமைப்புகள் போரட்டத்தில் குதித்தன. அவர்கள் அளித்த புகாரின் பேரில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து அப்போதைய தெலுங்கானா தலாசனி ஸ்ரீனிவாசிடம் கேள்விகள் எழுப்பின. அப்போது அவர் இந்த பாலியல் விவகாரம் குறித்து விசாரிக்க தனிக் குழு அமைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

தற்போது தெலுங்கானா அரசு ஒரு குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் திரையுலக பிரமுகர்கள், பெண்ணுரிமை அமைப்புக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினர் மற்றும் மாநகர காவல்துறையினர் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். திரையுலக சார்பில் நடிகைகள் சுப்ரியா, ஜான்சி லட்சுமி மற்றும் இயக்குனர் நந்தினி ரெட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

தெலுங்கு நடிகர் சங்கம் தற்போது ஸ்ரீரெட்டி மீதான தடையை விலக்கி உள்ளது. இது குறித்து சங்கம், “ஸ்ரீரெட்டி அளித்த குற்றச்சாட்டுக்களால் பலர் மனவருத்தம் அடைந்ததால் அவரை நீக்கி தடை விதித்தோம். தற்போது அரசு இது குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளதால் அவரை மீண்டும் சங்கத்தில் இணைத்து தடையை நீக்கி உள்ளோம் என அறிவித்துள்ளது.