டெல்லி :
ஜெர்மன் குடியுரிமை பெற்றிருந்த தெலுங்கானா கட்சி எம்எல்ஏவின் இந்திய குடியுரிமையை மத்தியஅரசு (Ministry of Home Affairs) ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
சந்திரசேகர ராவின் தெலுங்கான ராஷ்ட்ரிய சமீதி கட்சி சார்பில், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேமுலுவாடா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரமேஷ் சென்னாமனேனி. இவர் தற்போது எம்எல்ஏவாக பணியாற்றி வருகிறார்.
இவர் ஏற்கனவே ஜெர்மன் குடியுரிமை பெற்றவர் என்ற புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய மத்தியஅரசு, ரமேஷ் சென்னாமனேனி ஐரோப்பிய நாடான ஜெர்மன் குடியுரிமை பெற்றவர் என்பதை உறுதி செய்தது. அவர் போலி ஆவணங்கள் மூலம், இந்திய குடியுரிமை பெற்றுள்ளதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் எம்.எல்.ஏ., ரமேஷின் இந்திய குடியுரிமையை ரத்து செய்து உத்தரவிட்டது. இது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.